==================
ஆயுதங்கள் எவை?
===================
1) 600 பேரைக் கொன்ற சம்காரின் ஆயுதம் என்ன?
2) 1000 பேரைக் கொன்ற சிம்சோனின் ஆயுதம் எது?
3) தாவீதின் ஆயுதம் என்ன?
4) யோவாபின் ஆயுதம் - எனன?
5) ஏகூத்தின் ஆயுதம் என்ன?
6) அப்னேரின் ஆயுதம் என்ன ?
7) சீஷர்களுக்கு சொல்லப்பட்ட ஆயுதம் எது?
8) ஏசாவின் ஆயுதம் எது?
9) யாகேலின் ஆயுதம் எது?
10) சிமியோன், லேவியின் ஆயுதம் என்ன?
11) கிதியோனின் ஆயுதம் எவை ?
12) அபிமெலேக்கின் ஆயுதம் என்ன?
13) பினெகாசின் ஆயுதம் என்ன?
14) கோலியாத்தின் ஆயுதம் எவை?.
15) சர்வாயுதம் எது?
ஆயுதங்கள் எவை - பதில்கள்?
========================
1) 600 பேரைக் கொன்ற சம்காரின் ஆயுதம் என்ன?
Answer: தாற்றுக்கோல்
நியாயாதிபதிகள் 3:31
2) 1000 பேரைக் கொன்ற சிம்சோனின் ஆயுதம் எது?
Answer: கழுதையின் பச்சைத் தாடையெலும்பு
நியாயாதிபதிகள் 15:16
3) தாவீதின் ஆயுதம் என்ன?
Answer: கவண், கல்
1 சாமுவேல் 17:49
4) யோவாபின் ஆயுதம் எனன?
Answer: மூன்று வல்லயங்கள்
11 சாமுவேல் 18:14
5) ஏகூத்தின் ஆயுதம் என்ன?
Answer: இருபுறமும் கருக்குள்ள கத்தி
நியாயாதிபதிகள் 3:16
6) அப்னேரின் ஆயுதம் என்ன?
Answer: ஈட்டி
11 சாமுவேல் 2:23
7) சீஷர்களுக்கு சொல்லப்பட்ட ஆயுதம் எது?
Answer: பட்டயம்
லூக்கா 22:36
8) ஏசாவின் ஆயுதம் எது?
Answer: அம்பறாத்தூணியும், வில்லும்
ஆதியாகமம் 27:3
9) யாகேலின் ஆயுதம் எது?
Answer: கூடார ஆணி
நியாயாதிபதிகள் 4:21
10) சிமியோன், லேவியின் ஆயுதம் என்ன?
Answer: பட்டயம்
ஆதியாகமம் 34:25
11) கிதியோனின் ஆயுதம் எவை?
Answer: எக்காளம், வெறும் பானை, தீவட்டி
நியாயாதிபதிகள் 7:15,16
12) அபிமெலேக்கின் ஆயுதம் என்ன?
Answer: மரத்தின் கொம்பு
நியாயாதிபதிகள் 9:48,49
13) பினெகாசின் ஆயுதம் என்ன?
Answer: ஈட்டி
எண்ணாகமம் 25:7,8
14) கோலியாத்தின் ஆயுதம் எவை?.
Answer: பட்டயம், ஈட்டி கேடகம்
1 சாமுவேல் 17:45
15) சர்வாயுதம் எது?
Answer: 1) சத்தியம் என்னும் கச்சை
2) நீதியென்னும் மார்க்கவசம்
3) ஆயத்தம் என்னும் பாதரட்சை
4) விசுவாசம் என்னும் கேடகம்
5) இரட்சணியம் - என்னும் தலைச் சீரா
6) தேவவசனமாகிய ஆவியின் பட்டயம்
எபேசியர் 6:13-17
==============
பைபிள் கேள்வி பதில்கள்
===============
1. கடிதம் எழுதி நலம் விசாரிப்பதில் ஆர்வமற்றவராயிருந்த ஒரு அப்போஸ்தலன் யார்?
2. வியாதிநேரத்தில் மருத்துவர்களை மட்டுமே நம்பிய ஒரு ராஜா யார்?
3. யுத்தத்துக்கு சென்ற தாவீதை சரியாக வழிநடத்திய ஒரு செடி எது?
4. செம்பு வெட்டி எடுக்கும் மலைகள் எங்குள்ளது?
5. சிங்கார ஆடைக்காரி நாளைக்கு போகப்போறா தீயில...யார் அவள்?
6. தன் நாட்டின் நடுவில் பாயும் ஓடையை தூர்த்துப்போட்ட ராஜா யார்?
7. தள்ளுபடியான வெள்ளி யார் அவர்கள்?
8. அப்பா பிதாவே என்று எந்தெந்த நிருபங்களில் வாசிக்கிறோம்?
9. வேதாகமத்தில் ஆயுசின் வருஷம் குறிக்கப்பட்ட ஒரே பெண் யார்?
10. இஸ்ரவேலிலே மற்றவர்களை வாழ்த்தும்போது கூறப்படும் அண்ணண் தம்பி,அக்கா,தங்கை யார்?
[இஸ்ரவேலர் இவர்களை முன்னிட்டு மற்றவர்களை வாழ்த்துவார்கள்]
11. வெறுங்காலால் நடந்து மலைக்கு ஏறிப்போன ஒரு ராஜா யார்?
12. தரையின்மேல் இரண்டு முழ உயரத்திற்கு விழுந்து கிடந்தது எது?
13. அடையாளமாக குஷ்டரோகத்தைப்* பெற்றவன் யார்?
14. வேதாகமத்தில் தனக்காக A.C. Room ஐ உருவாக்கி வைத்திருந்த ஒரு ராஜா யார்?
15. "தலைநோவும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" இதற்கு பொருத்தமான நீதிமொழிகளின் வசனம் ⁉️
கேள்வி - பதில்கள்
=================
1. கடிதம் எழுதி நலம் விசாரிப்பதில் ஆர்வமற்றவராயிருந்த ஒரு அப்போஸ்தலன் யார்?
Answer: யோவான்
2 யோவான் 1:12
2. வியாதிநேரத்தில் மருத்துவர்களை மட்டுமே நம்பிய ஒரு ராஜா யார்?
Answer: ஆசா
2 நாளாகமம் 16:12
3. யுத்தத்துக்கு சென்ற தாவீதை சரியாக 💪🏼வழிநடத்திய ஒரு செடி எது?
Answer: முசுக்கட்டைச்செடி
1 நாளாகமம் 14:15
4. செம்பு வெட்டி எடுக்கும் மலைகள் எங்குள்ளது?
Answer: கானான் தேசம்
உபாகமம் 8:9
5. சிங்கார ஆடைக்காரி நாளைக்கு போகப்போறா தீயில...யார் அவள்?
Answer: காட்டுப்புல்
மத்தேயு 6:30
6. தன் நாட்டின் நடுவில் பாயும் ஓடையை தூர்த்துப்போட்ட ராஜா யார்?
Answer: எசேக்கியா
2 நாளாகமம் 32:4
7. தள்ளுபடியான வெள்ளி யார்?
Answer: அவர்கள் பின்மாற்ற இஸ்ரயேலர்
எரேமியா 6:30
8. அப்பா பிதாவே என்று எந்தெந்த நிருபங்களில் வாசிக்கிறோம்?
Answer: ரோமர், கலாத்தியர்
ரோமர் 8:15
கலாத்தியர் 4:6
9. வேதாகமத்தில் ஆயுசின் வருஷம் குறிக்கப்பட்ட ஒரே பெண் யார்?
Answer: சாராள்
ஆதியாகமம் 23:1
10. இஸ்ரவேலிலே மற்றவர்களை வாழ்த்தும்போது கூறப்படும் அண்ணண் தம்பி,அக்கா,தங்கை யார்?
[இஸ்ரவேலர் இவர்களை முன்னிட்டு மற்றவர்களை வாழ்த்துவார்கள்]
Answer: மனாசே, எப்பிராயீம்
ஆதியாகமம் 48:20
லேயாள், ராகேல்
ரூத் 4:11
11. வெறுங்காலால் நடந்து மலைக்கு ஏறிப்போன ஒரு ராஜா யார்?
Answer: தாவீது
2 சாமுயேல் 15:30
12. தரையின்மேல் இரண்டு முழ உயரத்திற்கு விழுந்து கிடந்தது எது?
Answer: காடைகள்
எண்ணாகமம் 11:31
13. அடையாளமாக குஷ்டரோகத்தைப் பெற்றவன் யார்?
Answer: மோசே
யாத்திராகமம் 4:6,7
14. வேதாகமத்தில் தனக்காக A.C. Room ஐ (குளிர்ச்சியான அறை) உருவாக்கி வைத்திருந்த ஒரு ராஜா யார்?
Answer: எக்லோன்
நியாயாதிபதிகள் 3:20
15. "தலைநோவும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" இதற்கு பொருத்தமான நீதிமொழிகளின் வசனம் ⁉️
Answer: இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான்.
நீதிமொழிகள் 14:10
===================
வேதாகம கேள்விகளுக்கு பதில் தரவும்
===================
1) இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் யார் கூறியது?
2) இருதயத்தின் வேண்டுதலை சொல்லி முடிக்கும் முன்னே காரியம் வாய்த்தது யாருக்கு?
3) உன் இருதயத்தில் உள்ளபடி செய்யுங்கள் நானும் உன்னோடு இருக்கிறேன் என்றது யார்?
4) கர்த்தரிடத்தில் ஜெபித்த பிறகு கவலையின்றி சென்றவள் யார்?
5) வெள்ளி குகையில் உருகுமாப் போல கோப அக்கினியில் உருகுவீர்கள் என்று யாரை குறித்து சொல்லப்பட்டது?
6) எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினயை பார்க்க செய்கிறீரே என்றது யார்?
7) நீ ஏறிவா என்றால் நான் ஜெயிப்பேன். இரு நான் உன்னிடம் வருகிறேன் என்றால் அவர்கள் ஜெயிப்பார்கள் இது யாருடைய கூற்று?
8) தகப்பனின் புத்தியில்லாத வேண்டுதலுக்கும் கீழ்படிந்து தன் உயிரை கொடுத்த பெண் யார்?
9) பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் எதற்காக புலம்புவார்கள்?
10) வனாந்தரம் அவர்களை அடைத்துப் போட்டது என்றவர் யார்?
================
வேதாகம கேள்விகளுக்கு பதில்
===============
1) இந்தக் கல் தேவனுக்கு வீடாகும் யார் கூறியது?
Answer: யாக்கோபு
ஆதியாகமம் 28:22
2) இருதயத்தின் வேண்டுதலை சொல்லி முடிக்கும் முன்னே காரியம் வாய்த்தது யாருக்கு?
Answer: எலியேசர்
ஆதியாகமம் 24:45
3) உன் இருதயத்தில் உள்ளபடி செய்யுங்கள் நானும் உன்னோடு இருக்கிறேன் என்றது யார்?
Answer: ஆயுததாரி
1 சாமுவேல் 14:7
4) கர்த்தரிடத்தில் ஜெபித்த பிறகு கவலையின்றி சென்றவள் யார்?
Answer: அன்னாள்
1 சாமுவேல் 1:18
5) வெள்ளி குகையில் உருகுமாப் போல கோப அக்கினியில் உருகுவீர்கள் என்று யாரை குறித்து சொல்லப்பட்டது?
Answer: இஸ்ரவேலர்
எசேக்கியேல் 22:22
6) எனக்கு அக்கிரமத்தை காண்பித்து என்னை தீவினயை பார்க்க செய்கிறீரே என்றது யார்?
Answer: ஆபகூக்
ஆபகூக் 1:3
7) நீ ஏறிவா என்றால் நான் ஜெயிப்பேன். இரு நான் உன்னிடம் வருகிறேன் என்றால் அவர்கள் ஜெயிப்பார்கள் இது யாருடைய கூற்று?
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 14:12,13
8) தகப்பனின் புத்தியில்லாத வேண்டுதலுக்கும் கீழ்படிந்து தன் உயிரை கொடுத்த பெண் யார்?
Answer: யெப்தாவின் குமாராத்தி
நியாயாதிபதிகள் 11:34,37
9) பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் எதற்காக புலம்புவார்கள்?
Answer: மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை கண்டு
மத்தேயு 24:30
10) வனாந்தரம் அவர்களை அடைத்துப் போட்டது என்றவர் யார்?
Answer: பார்வோன்
யாத்திராகமம் 14:3
=======================
பைபிள் கேள்வி பதில்கள் (கோடிட்ட இடத்தை நிரப்புக)
=======================
1. அதனால் சவுல் ------------ பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்‼️
2. இஸ்ரயேல் வம்சத்தார் எல்லாரும் 30 நாள் துக்கங்கொண்டாடினார்கள் யார் யாருக்காக ⁉️
3. கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும் உன் ----------------- கையில் வட்டி வாங்காயாக‼️
4. வேசித்தனமும் மதுபானமும் திராட்சரசமும் -------------மயக்கும்‼️
5. விதையானது ----------கீழ் மக்கிப்போயிற்று‼️
6. எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போயிருக்கையில் தேசத்திலே -------------உணாடாயிற்று‼️
7. ஆசா அரசாண்ட 35ம் வருஷம்மட்டும் --------- இல்லாதிருந்தது‼️
8. ----------------நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட -----------------உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்‼️
9. வழுவிப்போகிற மனதையுடையவர்கள் --------------‼️
10. --------------ஏன் சந்தேகப்பட்டாய்⁉️
------------அங்கே தனிமையாயிருந்தார்⁉️
------------நான்தான் ------------‼️
--------------அலைவுபட்டது⁉️
11. தே___ ___ ___ய___மா__ ன்
___ ___ ___ ___ நா____ ன்
12. ஏரோது - நாலாம் ஜாலம்
யோவான்ஸ்நானன் - என்னை இரட்சியும்
பேதுரு - பலத்த செய்கைகள்
இயேசு - காற்பங்கு தேசாதிபதி
====================
கோடிட்ட இடத்தை நிரப்புக (பதில்கள்)
====================
1. அதனால் சவுல் ------------ பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்‼️
Answer: அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்.
1 சாமுவேல் 23:28
2. இஸ்ரயேல் வம்சத்தார் எல்லாரும் 30 நாள் துக்கங்கொண்டாடினார்கள் யார் யாருக்காக⁉️
Answer: ஆரோன்
இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங் கொண்டாடினார்கள்.
எண்ணாகமம் 20:29
Answer: மோசே
இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்
உபாகமம் 34:8
3. கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும் உன் ----------------- கையில் வட்டி வாங்காயாக‼️
Answer: கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும், ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.
உபாகமம் 23:19
4. வேசித்தனமும் மதுபானமும் திராட்சரசமும் -------------மயக்கும்‼️
Answer: இருதயத்தை
ஓசியா 4:11
5. விதையானது ----------கீழ் மக்கிப்போயிற்று‼️
Answer: மண்கட்டிகளின்
யோவேல் 1:17
6. எலிசா கில்காலுக்குத் திரும்பிப் போயிருக்கையில் தேசத்திலே -------------உணாடாயிற்று‼️
Answer: பஞ்சம்
2 இராஜாக்கள் 4:38
7. ஆசா அரசாண்ட 35ம் வருஷம்மட்டும் --------- இல்லாதிருந்தது‼️
Answer: யுத்தம்
2 நாளாகமம் 15:19
8. ----------------நாடாமலும் வார்ப்பிக்கப்பட்ட -----------------உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்‼️
Answer: விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
லேவியராகமம் 19:4
9. வழுவிப்போகிற மனதையுடையவர்கள் --------------‼️
Answer: புத்திமான்கள்
ஏசாயா 29:24
10. --------------ஏன் சந்தேகப்பட்டாய்⁉️
------------அங்கே தனிமையாயிருந்தார்⁉️
------------நான்தான் ------------‼️
--------------அலைவுபட்டது⁉️
Answer: அற்பவிசுவாசியே
மத்தேயு 14:31
Answer: அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமான போது அங்கே தனிமையாயிருந்தார்.
மத்தேயு 14:23
Answer: திடன்கொள்ளுங்கள்
பயப்படாதிருங்கள்
மத்தேயு 14:27
Answer: அலைகளினால்
மத்தேயு 14:24
11. தே___ ___ ___ய___மா__ ன்
Answer: தேவனுடைய குமாரன்
___ ___ ___ ___ நா____ ன்
Answer: யோவான்ஸ்நானன்
12. ஏரோது - நாலாம் ஜாலம்
Answer: ஏரோது - காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதி
லூக்கா 3:1
யோவான்ஸ்நானன் - என்னை இரட்சியும்
Answer: யோவான்ஸ்நானன் - பலத்தசெய்கைகள்
மாற்கு 6:14
பேதுரு - பலத்த செய்கைகள்
Answer: பேதுரு - என்னை இரட்சியும்
மத்தேயு 14:30
இயேசு - காற்பங்கு தேசாதிபதி
Answer: இயேசு - நாலாம் ஜாலம்
மாற்கு 6:48