================
வேதத்தில் வீடுகள்
=================
1) யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் எந்த ராஜாவின் காலத்தில்
இருந்தது?
2) சாவில்லாத வீடு எங்கு இருந்ததில்லை?
3 அலங்கத்தின் மதிலில் இருந்தது யாருடைய வீடு?
4) கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீடு யாருடையது?
5 குளிர்ச்சியான அறை வீட்டில் இருந்தவன் யார்?
6 சிறைச்சாலையாக பயன்பட்ட வீடு எது?
7) ராமாவிலே இருந்த வீடு யாருடையது?
8) கர்த்தரின் பீடங்களண்டையில் இருக்கும் வீடு யாருக்குரியது?
9) பாதாளத்துக்குப்போம் வழி எது?
10) பிதாக்கள் வைக்கும் சுதந்தரம் எது?
11) வீடு எதினாலே கட்டப்படும்?
12) லேவியருக்கு காணியாட்சியாகக் கொடுக்கப்பட்ட வீடுகள் எத்தனை?
13) இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப் போகும் வீடுகள் எவை?
14) இஸ்ரவேல் வம்சத்தார் எதினால் வீடுகளைக் கட்டினார்கள்?
15) வீடுகள் தோறும் நுழைந்தவன் யார்?
16) ஜெப ஆலயத்துக்கு அடுத்த வீடு யாருடையது ?
17) அழிந்து போகும் நம்முடைய வீடு எது?
18) அசுத்த ஆவிகளுடைய காவல் வீடு எது?
19) கள்ளர் குகையாக்கப்பட்ட என்னுடைய வீடு எது?
20) கை வேலையல்லாத நித்திய வீடு நமக்கு எங்கு உண்டு?
வேதத்தில் வீடுகள்
===================
1) யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் எந்த ராஜாவின் காலத்தில்
இருந்தது?
Answer: உசியா ராஜாவின் காலத்தில் இருந்தது
ஆமோஸ் 1:1
ஆமோஸ் 3:15
2) சாவில்லாத வீடு எங்கு இருந்ததில்லை?
Answer: எகிப்திலே இருந்ததில்லை
யாத்திராகமம் 12:1,30
3) அலங்கத்தின் மதிலில் இருந்தது யாருடைய வீடு?
Answer: ராகாபின் வீடு
யோசுவா 2:1,15
4) கேதுரு மரங்களால் செய்யப்பட்ட வீடு யாருடையது?
Answer: தாவீது
11 சாமுவேல் 7:2
5) குளிர்ச்சியான அறை வீட்டில் இருந்தவன் யார்?
Answer: எக்லோன்
நியாயாதிபதிகள் 3:20
6) சிறைச்சாலையாக பயன்பட்ட வீடு எது?
Answer: தலையாரிகளின் அதிபதியின் வீடு
ஆதியாகமம் 40:3
7) ராமாவிலே இருந்த வீடு யாருடையது?
Answer: சாமுவேல்
1 சாமுவேல் 7:17
8) கர்த்தரின் பீடங்களண்டையில் இருக்கும் வீடு யாருக்குரியது?
Answer: அடைக்கலான் குருவி
சங்கீதம் 84:3
9) பாதாளத்துக்குப்போம் வழி எது?
Answer: பரஸ்திரியின் வீடு
நீதிமொழிகள் 7:4,27
10) பிதாக்கள் வைக்கும் சுதந்தரம் எது?
Answer: வீடும், ஆஸ்தியும்
நீதிமொழிகள் 19:14
11) வீடு எதினாலே கட்டப்படும்?
Answer: ஞானத்தினாலே
நீதிமொழிகள் 24:3
12) லேவியருக்கு காணியாட்சியாகக் கொடுக்கப்பட்ட வீடுகள் எத்தனை?
Answer: 20 அறை வீடுகள்
எசேக்கியேல் 45:5
13) இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப் போகும் வீடுகள் எவை?
Answer: அக்சீபின் வீடுகள்
மீகா 1:14
14) இஸ்ரவேல் வம்சத்தார் எதினால் வீடுகளைக் கட்டினார்கள்?
Answer: பொளிந்த கற்களால்
ஆமோஸ் 5:11
15) வீடுகள் தோறும் நுழைந்தவன் யார்?
Answer: சவுல்
அப்போஸ்தலர் 8:3
16) ஜெப ஆலயத்துக்கு அடுத்த வீடு யாருடையது?
Answer: யுஸ்து
அப்போஸ்தலர் 18:.7
17) அழிந்துபோகும் நம்முடைய வீடு எது?
Answer: பூமிக்குரிய கூடாரம்
11கொரிந்தியர் 5:1
18) அசுத்த ஆவிகளுடைய காவல் வீடு எது?
Answer: பாபிலோன்
வெளிப்படுத்தல் 18:2
19) கள்ளர் குகையாக்கப்பட்ட என்னுடைய வீடு எது?
Answer: ஜெப வீடு
மத்தேயு 21:13
20) கை வேலையல்லாத நித்திய வீடு நமக்கு எங்கு உண்டு?
Answer: பரலோகத்தில்
11 கொரிந்தியர் 5:1
====================
பைபிள் கேள்வி பதில்கள்
===================
1. மரித்தவன் ஒருவன் இன்றும் பேசுகிறானாம்‼️ யார் அவன்⁉️
2. தன் பிறந்த நாளைச் சபித்தவர்கள் யார் யார் ⁉️
3. மலடி என்று சொல்லப்பட்டவர்கள் யாவர்⁉️
4. இஸ்ரயேல் புத்திரர் யார் யாருக்காக 30 நாள் துக்கங்கொண்டாடினார்கள்⁉️
5. கர்த்தருக்குப் பண்ணின பொருத்தனையை நிறைவேற்றியவர்கள் யார் யார் ⁉️
6. நான் இடது கைப் பழக்கம் உள்ளவன் ‼️ நான் யார் ⁉️
7. சீட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் யார் ⁉️
8. 80, 83 வயது உடைய சாதனையாளர்கள் யார் யார்⁉️
9. மந்திரவாதிகளால் செய்ய முடியாது போன வாதை எது⁉️
10. என் தகப்பனும் என் தாயும் என்னை ____________ கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்ளுவார்‼️
பைபிள் கேள்விக்கான பதில்கள்
================
1. மரித்தவன் ஒருவன் இன்றும் பேசுகிறானாம்‼️ யார் அவன் ⁉️
Answer: விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான். அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான். அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார். அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
எபிரேயர் 11:4
2. தன் பிறந்த நாளைச் சபித்தவர்கள் யார் யார்⁉️
Answer: யோபு
யோபு 3:1
Answer: எரேமியா
எரேமியா 21:14
3. மலடி என்று சொல்லப்பட்டவர்கள் யாவர்⁉️
Answer: சாராள்
ஆதியாகமம் 11:30
Answer: ரெபெக்காள்
ஆதியாகமம் 25:21
Answer: ராகேல்
ஆதியாகமம் 29:31
Answer: மனோவாவின் மனைவி
நியாயாதிபதிகள் 13:2
Answer: எலிசபெத்
லூக்கா 1:36
4. இஸ்ரவேல் புத்திரர் யார் யாருக்காக 30 நாள் துக்கங்கொண்டாடினார்கள்⁉️
Answer: ஆரோன்
எண்ணா 20:29
Answer: மோசே
உபாகமம் 34:8
5. கர்த்தருக்குப் பண்ணின பொருத்தனையை நிறைவேற்றியவர்கள் யார் யார்⁉️
Answer: யெப்தா
நியாயாதிபதிகள் 11:39
Answer: அன்னாள்
1 சாமுவேல் 1:28
Answer: அப்சலோம்
2 சாமுவேல் 15:7,12
6. நான் இடது கைப் பழக்கம் உள்ளவன்‼️ நான் யார் ⁉️
Answer: ஏகூத்
நியாயாதிபதிகள் 3:15
7. சீட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் யார்⁉️
Answer: யோனத்தான்
1 சாமுவேல் 14:42
Answer: யோனா
யோனா 1:7
Answer: மத்தியா
அப்போஸ்தலர் 1:26
8. 80, 83 வயது உடைய சாதனையாளர்கள் யார் யார்⁉️
Answer: மோசேயும் ஆரோனும்
யாத்திராகமம் 7:6,7
9. மந்திரவாதிகளால் செய்ய முடியாது போன வாதை எது⁉️
Answer: பேன்கள்
யாத்திராகமம் 8:18
10. என் தகப்பனும் என் தாயும் என்னை ____________ கர்த்தர் என்னை சேர்த்துக் கொள்ளுவார்‼️
Answer: கைவிட்டாலும்
சங்கீதம் 27:10
=====================
பைபிள் கேள்வி பதில்கள்
=======================
1. வேதாகமத்தில் பெரிய விருந்து பண்ணினது யார் யார்?
2. குடல் சரிந்து இறந்த இருவர் யார்?
3. கர்த்தரின் பலிபீடத்தை செப்பனிட்ட இருவர் யார்?
4. மகா பெரிய சேனைகளாக நின்ற இரு கூட்டத்தார் யார்?
5. இஸ்ரவேல் என்னும் பலிபீடத்தை கட்டின இருவர் யார்?
6. வெண்கல மற்றும் மர பிரசங்க பீடத்தில் நின்றவர்கள் யார் யார்?
7. எட்டு வயதில் இர்ஜாவான இருவர் யார்?
8. 7 வயதில் ராஜவானவன் யார்?
9. நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று குறிக்கப்பட்டது யார்?
10. மதுபானத்தினால் நிரைதிருக்கிரார்கள் என்று குறிக்கப்பட்டது யார்?
11. பவுல் காலிகளில் படிந்த் துசியை உதறிப்போட்ட பட்டனம் எது?
12. பவுல் வஸ்திரத்தை உதறிப்போட்ட பட்டணம் எது?
13. செய்கையிலும், வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசி யார்?
14. செய்கையிலும் , வாக்கிலும் வல்லவன் யார்?
15. செய்கையில் வல்லவன் யார்?
16. ஒரு வயலை வாங்கினவள் யார்? ஒரு வயலையும் வாங்கதவன் யார்?
17. யாருடைய இருதயம் கர்த்தருக்கு முன்பாக உண்மையாக இருந்தது?
18. அனேகரைபார்க்கிலும் உன்மையுள்ளவனும், தேவனுக்கு பயந்த அரண்மனைத்தலைவன் யார்?
19. பக்த்தியுள்ளவனும், யூதரெல்லாராலும் நல்லவன் என்று சாட்சி பெற்றவன் யார்?
20. மனோ ராஜ்ஜியம் கொண்டவர்கள் யார்?
பைபிள் கேள்விக்கான பதில்கள்
====================
1. வேதாகமத்தில் பெரிய விருந்து பண்ணினது யார் யார்?
Answer: ஆபிரகாம்
ஆதியாகமம் 21:8
Answer: இஸ்ரவேலின் ராஜா
2 இராஜாக்கள் 6:23
Answer: அகாஸ்வேரு
எஸ்தர் 2:18
Answer: பெல்ஷாத்சார்
தானியேல் 5:1
Answer: லேவி
லூக்கா 5:29
2. குடல் சரிந்து இறந்த இருவர் யார்?
Answer: யோராம்
2 நாளாகமம் 21:15
Answer: யூதாஸ்
அப்போஸ்தலர் 1:18
3. கர்த்தரின் பலிபீடத்தை செப்பனிட்ட இருவர் யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 18:30
Answer: மனாசே
2 நாளாகமம் 33:16
4. மகா பெரிய சேனைகளாக நின்ற இரு கூட்டத்தார் யார்?
Answer: உலர்ந்த எலும்புகள்
எசேக்கியேல் 37:10
Answer: தாவீதின் மனுஷர்
2 நாளாகமம் 12:22
5. இஸ்ரவேல் என்னும் பலிபீடத்தை கட்டின இருவர் யார்?
Answer: யாக்கோபு (ஏல்எல்லோகே இஸ்ரவேல் )
ஆதியாகமம் 33:20
Answer: எலியா
2 இராஜாக்கள் 18:31
6. வெண்கல மற்றும் மர பிரசங்க பீடத்தில் நின்றவர்கள் யார் யார்?
Answer: சாலொமோன்
2 நாளாகமம் 6:13
Answer: எஸ்றா
நெகேமியா 8:4
7. எட்டு வயதில் இராஜாவான இருவர் யார்?
Answer: யோசியா
2 நாளாகமம் 34:1
Answer: யோயாக்கீன்
2 நாளாகமம் 36:9
8. 7 வயதில் ராஜவானவன் யார்?
Answer: யோவாஸ்
2 இராஜாக்கள் 11:21
9. நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய் என்று குறிக்கப்பட்டது யார்?
Answer: அன்னாள்
1 சாமுவேல் 1:14
10. மதுபானத்தினால் நிரைதிருக்கிரார்கள் என்று குறிக்கப்பட்டது யார்?
Answer: 120 பேர்
அப்போஸ்தலர் 2:13
11. பவுல் காலிகளில் படிந்த் துசியை உதறிப்போட்ட பட்டனம் எது?
Answer: அந்தியோக்கியா
அப்போஸ்தலர் 13:51
12. பவுல் வஸ்திரத்தை உதறிப்போட்ட பட்டணம் எது?
Answer: கொரிந்து
அப்போஸ்தலர் 8:1,6
13. செய்கையிலும், வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசி யார்?
Answer: இயேசுகிறிஸ்து
லூக்கா 24:19
14. செய்கையிலும் , வாக்கிலும் வல்லவன் யார்?
Answer: மோசே
அப்போஸ்தலர் 7:22
15. செய்கையில் வல்லவன் யார்?
Answer: பெனாயா
1 நாளாகமம் 11:22
16. ஒரு வயலை வாங்கினவள் யார்?
Answer: குணசாலியான ஸ்திரி
நீதிமொழிகள் 31:6
ஒரு வயலையும் வாங்கதவன் யார்?
Answer: நெகெமியா
நெகேமியா 5:14,18
17. யாருடைய இருதயம் கர்த்தருக்கு முன்பாக உண்மையாக இருந்தது?
Answer: ஆபிரகாம்
நெகெமியா 9:7,8
18. அனேகரைப் பார்க்கிலும் உன்மையுள்ளவனும், தேவனுக்கு பயந்த அரண்மனைத்தலைவன் யார்?
Answer: அனனியா
நெகேமியா 7:2
19. பக்த்தியுள்ளவனும், யூதரெல்லாராலும் நல்லவன் என்று சாட்சி பெற்றவன் யார்?
Answer: அனனியா
அப்போஸ்தலர் 22:12
20. மனோ ராஜ்ஜியம் கொண்டவர்கள் யார்?
Answer: சன்பல்லாத், கேஷேம்
நெகெமியா 5:2
நெகேமியா 6:8
====================
பைபிள் கேள்வி பதில்கள்
=======================
1. பார்வோனின் அதிபதி யார்?
2. மோசேயின் மாமன் பெயர் என்ன?
3. யோசுவாவின் பழையபெயர் என்ன?
4. ஆபிரகாம் முந்தைய பெயர் என்ன?
5. சாராயை கர்த்தர் எப்படியழைத்தார்?
6. பேதுருவுக்கு இயேசு என்ன பெயரிட்டார் ?
7. ததேயு என்னும் மறுநாமமுள்ள ________?
8. ஆறுதலின் மகன் யார்?
9. நகோமி தனக்கு என்ன பெயர் சூட்டிக்கொண்டாள்?
10. திவ்விய வாசகன் யார்?
11. திஸ்பியன் வர்ணிக்கப்பட்டடது யார்?
12. உசியா ராஜாவின் மறு பெயர் என்ன?
13. யாக்கோபின் மறு பெயர் என்ன?
14. அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு ________ என்று பேரிட்டாள்?
15. இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு ________ என்று பேரிட்டான்?
16. அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு ______ என்று பேரிட்டாள்.?
17. இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு _________ என்று பேரிட்டாள்?
18. அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற___________ என்னும் பேரிட்டான்?
19. நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு _________ என்று பேரிட்டான்.?
20. எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள் வரைக்கும் ___________ என்னப்படுகிறது.?
21. இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் __________ பள்ளத்தாக்கு என்னப்பட்டது.?
22. தோமாவின் மறு பெயர் என்ன ?
பைபிள் கேள்வி பதில்கள்
=========================
1. பார்வோனின் அதிபதி யார்?
Answer: போத்திபார்
ஆதியாகமம் 37:36
2. மோசேயின் மாமன் பெயர் என்ன?
Answer: ரெகுவெல்
எண்ணாகமம் 10:29
Answer: எத்திரோ
யாத்திராகமம் 3:1
Answer: கேனியன்
நியாயாதிபதிகள் 1:16
3. யோசுவாவின் பழையபெயர் என்ன?
Answer: ஒசேயா
எண்ணாகமம் 13:16
4. ஆபிரகாம் முந்தைய பெயர் என்ன?
Answer: ஆபிராம்
ஆதியாகமம் 17:5
5. சாராயை கர்த்தர் எப்படி அழைத்தார்?
Answer: சாராள்
ஆதியாகமம் 17:15
6. பேதுருவுக்கு இயேசு என்ன பெயரிட்டார் ?
Answer: கேபா
யோவான் 1:42
7. ததேயு என்னும் மறுநாமமுள்ள ________?
Answer: லெபேயு
மத்தேயு 10:3
8. ஆறுதலின் மகன் யார்?
Answer: பர்னபா
அப்போஸ்தலர் 4:36
9. நகோமி தனக்கு என்ன பெயர் சூட்டிக்கொண்டாள்?
Answer: மாராள்
ரூத் 1:20
10. திவ்விய வாசகன் யார்?
Answer: யோவான்
வெளி.விசேஷம் 1
10. திஸ்பியன் வர்ணிக்கப்பட்டடது யார்?
Answer: எலியா
1 இராஜாக்கள் 17:1
11. உசியா ராஜாவின் மறு பெயர் என்ன?
2 நாளாகமம் 26:3
உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
2 இராஜாக்கள் 15:1
யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் *அசரியா* ராஜாவானான்.
2 இராஜாக்கள் 15:2
அவன் ராஜாவாகிற போது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள்.
11. யாக்கோபின் மறு பெயர் என்ன?
Answer: இஸ்ரவேல்
ஆதியாகமம் 32:28
12. அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு ________ என்று பேரிட்டாள்?
Answer: மோசே
யாத்திராகமம் 2:10
13. இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு ________ என்று பேரிட்டான்?
Answer: நோவா
ஆதியாகமம் 5:29
14. அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு ______ என்று பேரிட்டாள்?
Answer: லேவி
ஆதியாகமம் 29 :34
15. இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு _________ என்று பேரிட்டாள்?
Answer: யூதா
ஆதியாகமம் 29:35
16. அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள் மட்டும் வழங்கிவருகிற___________ என்னும் பேரிட்டான்?
Answer: பேரேஸ் ஊசா
2 சாமுவேல் 6:8
17. நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு _________ என்று பேரிட்டான்.?
Answer: பெனியெல்
ஆதியாகமம் 32:30
18. எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள் வரைக்கும் ___________ என்னப்படுகிறது?
Answer: கில்கால்
யோசுவா 5:9
19. இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் __________ பள்ளத்தாக்கு என்னப்பட்டது?
Answer: எஸ்கோல்
எண்ணாகமம் 13:24
20. தோமாவின் மறு பெயர் என்ன ?
Answer: திதிமு என்னப்பட்ட தோமா
யோவான் 21:2